Showing posts with label Poltical update. Show all posts
Showing posts with label Poltical update. Show all posts

Monday, 6 February 2017

தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: ஸ்டாலின்

திருச்சி: சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து தள்ளிவைப்பது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Sunday, 5 February 2017

சசிகலாவிற்கு பெங்களூரு சிறையை தயார் படுத்த மத்திய அரசு ரகசிய உத்தரவு?(prison for sasikala)

சொத்து குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அடுத்த ஒரு வாரத்தில் வெளியாகும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.

மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்பட்ட பன்னீர்செல்வத்தை  ராஜினாமா செய்ய வைத்து, சசி.,முதல்வராக பொறுப்பு ஏற்க காய் நகர்த்தி வரும் வேளையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வருவதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது. தீர்ப்பு வருவதற்குள் சசிகலா முதல்வராக பொறுப்பு ஏற்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை தயார் படுத்தி வைக்குமாறு, மத்திய அரசு மாநில அரசு மூலம் ரகசிய  உத்தரவு பிறப்பித்துள்ள தகவல் கசிந்துள்ளது. பன்னீர் மவுனமாக இருந்ததன் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது??

 (கார்ட்டூன் படம் நன்றி தினமலர்)

தமிழக முதல்வராகிறார் சசிகலா(TAMIL NADU CM SASIKALA)



அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் வருகிற 7ஆம் தேதி அல்லது 9ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்ச‌ராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடை‌பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை அதிமுக தலைவராக சசிகலாவின் பெயரை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வழிமொழிந்தனர். சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம், சசிகலா முதலமைச்சராவது உறுதியாகியுள்ளது. வருகிற 7ஆம் தேதி அல்லது 9ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலில் ஜெயித்து முதல்வராகட்டும்: பப்ளிக்(if u dare stand in election and win)

தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலில் ஜெயித்து முதல்வராகட்டும்: பப்ளிக்


சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்த தமிழக மக்கள் கொதித்து போய் தங்கள் கருத்துகளை வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
அதில், தமிழகத்தை யார் ஆளவேண்டும் என நாங்கள் தான் முடிவு செய்யனும், சசிகலாவிற்கு தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலில் நின்று ஜெயித்து முதல்வராக வரசொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
அது போல் சசிகலாவை எதிர்த்து ஏராளமானோர் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.

சிரித்த முகத்தோடு பதவியை ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் முதலமைச்சர் ஒ.பி.எஸ்(With joyful face ops resigned his post)

சிரித்த முகத்தோடு பதவியை ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் முதலமைச்சர் ஒ.பி.எஸ்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, 3வது முறையாக முதலமைச்சாரக பதவியேற்கும் வாய்ப்பு, பணிவின் சிகரம் ஓ.பி.எஸ்.சையே தேடி வந்தது.
ஆட்சிக்கு ஒ.பன்னீர்செல்வம், கட்சிக்கு சசிகலா என்ற டீலில் கட்சியும், ஆட்சியும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா இறந்து 60 நாட்கள் ஆன நிலையில் முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார் ஓ.பி.எஸ்.
காலை 10 மணிக் கு போயஸ் கார்டனில் தொடங்கிய முக்கிய நிர்வாகிகளின் கூட்டம் நீண்ட விவாதத்துக்கு பிறகு, முடிவடைந்தது. பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை ஒ.பன்னீர்செல்வமே வாசித்தார்.

வழக்கமான பன்னீர்செல்வமாக இல்லாமல் இருண்டுபோன முகத்துடன் அவர் காணப்பட்டார். அந்த கடிதத்தை படிக்கும்போது மட்டும், சிரிப்பை வரவழைத்து கொண்டு, சிரித்தபடியே படித்தார்.
என்னதான் விஸ்வாசத்தோடு பதவியை ராஜினாமா செய்தாலும், தனிப்பட்ட முறையில்ல ஒரு இறுக்கம் இருக்கத்தானே செய்யும். அதை வெளி காட்டிக்கொள்ளாமல், தனது பதவியை மற்றவருக்காக ராஜினாமா செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதுவும் சிரித்தமுகத்தோடு, பதவியை தாரை வார்த்து கொடுத்த முதலமைச்சர் இந்தியவிலேயே இவராகதான் இருக்க முடியும்.

sasikala to take over as Tamil Nadu CM on Feb. 9

Tamil Nadu Chief Minister O. Panneerselvam proposed her name at a meeting of party MLAs in Chennai.

AIADMK general secretary V.K. Sasikala was on Sunday elected as the Leader of the Legislature party by the MLAs in the party head office in Chennai paving the way for her swearing in as Chief Minister of Tamil Nadu.

Ms. Sasikala will be sworn in as the Chief Minister of Tamil Nadu on February 9.
The development came exactly two months after Jayalalithaa's death. Chief Minister O. Panneerselvam proposed her name in the MLAs' meeting and she was unanimously elected as the Legislature party leader.

Mr. Panneerselvam said he would soon hand over the resignation to the Governor.
Ms. Sasikala was  elected as the party's general secretary in December last year following the death of Jayalalithaa.

If she is sworn in as Chief Minister, Ms. Sasikala needs to get elected to the Assembly within six months.

“It was Panneerselvam who had first persuaded me to become the chief minister and general secretary as well when Jayalalithaa passed away,” Ms. Sasikala told party legislators, after being elected as the legislature party leader.

The AIADMK twitter handle said "Following the demise of our Honourable Amma, it was Thiru. O.Paneerselvam who urged me first to take charge as the general secretary of AIADMK", said Ms. Sasikala.

The twitter handle further stated that Ms. Sasikala assured "The Tamil Nadu Government will always work towards the welfare of the people. Tamil Nadu Government will follow the principles of Amma."

Sasikala Natarajan elected as Legislative party leader, O Panneerselvam resigns as Tamil Nadu CM


Sasikala is expected to take oath as Chief Minister of the state on February 8 or 9. She will replace TN CM O Panneerselvam.
In a sudden development, the AIADMK MLAs have elected the AIADMK General Secretary, Sasikala Natarajan as the Legislative party leader. The AIADMK announced that Tamil Nadu Chief Ministr O Panneerselvam proposed the name of “Chinnamma”, Sasikala Natarajan as the leader of AIADMK Legislature Party Leader.
Meanwhile O Panneerselvam has put down his papers and have resigned from the post of the chief Minister of Tamil Nadu.
More details awaited.......