Showing posts with label Political update. Show all posts
Showing posts with label Political update. Show all posts

Wednesday, 8 February 2017

ரூ.500 வாங்கிட்டு தானே ஓட்டுப் போட்டே? : அதிமுக சாதி கட்சிதாண்டா, புலிப் படை கருணாஸ்

நேற்று முன் தினம் நடிகர் கருணாஸ் மீடியாக்களுக்கு அளித்த பேட்டி இந்தியாவையே அதிரச்செய்தது. ஓட்டுப் போட்டாச்சுல்ல கம்முனு போங்க, சசிகலா முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. என்னடா பண்ணுவீங்க என்று கொளுத்திப் போட்டார்.

அவர் வெறும் நடிகர் என்பதைத் தாண்டி ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பது இங்கு முக்கியம். மீடியாக்களிடம் பேசும் போது கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டும்.

ஆனால், திமிர்த்தனமாக அவர் பேசியது பெரும் கண்டனங்களை உருவாக்கியது. நேற்றும் இரவு தனது ட்விட்டர் பக்கத்தில்,

ஆமாம் அதிமுக ஒரு சாதிக் கட்சிதான் என்ன பண்ணுவீங்க…? ஜெயாவை காப்பாற்றியதும், அவரின் கட்சியைக் காப்பாற்றியதும் எங்கள் ஜாதிதானே.? இல்லைனா கருணாநிதி எப்போவோ ஜெயாவைக் காலி பண்ணி இருப்பார் என்று பதிவிட்டார்.

அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரிதாக ஆரவராம் செய்து பதில் டுவிட் போட்டார்கள்.

ஆனால், பொது மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பேரு கொந்தளிப்பை உண்டாக்கி விட்டது.

இன்னும் என்னெல்லாம் நடக்குமோ என்று மக்கள் பதறுகிறார்கள்.

Source.:liveday.in

Tuesday, 7 February 2017

ஜெயலலிதா சமாதியில் உண்மைகளை போட்டுடைத்த முதல்வர் பன்னீர் (உண்மைகள் உள்ளே)

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் இன்று இரவு 9 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தார். அங்கு வந்த முதல்வர் பன்னீர்செல்வம் சுமார் 45 நிமிடங்கள் யாரிடமும் பேசாமல் சமாதியின் முன்பு தியானத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, தியானத்தை கலைத்த பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளிக்க ஆரம்பித்தார். அந்த பேட்டியில்..

என்னுடைய மனசாட்சி உந்துதாலால் இங்கு அமர்ந்து அஞ்சலி செலுத்தினேன். ரத்தத்தின் ரத்தமான உறவுகளுக்கு தெரியபடுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை உந்துதல்படுத்தப்பட்டது. இதனால் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் சில உண்மைகளை சொல்லப்போகிறேன்.

பொதுச்செயலாளராக மதுசூதனனை நியமிக்குமாறு ஜெயலலிதா கூறினார். முதலில் என்னை முதலமைச்சராக பதவியேற்கச் சொன்னதை நான் ஏற்கவில்லை.
சசிகலாவை ஊருக்கு கூட்டிச்செல்ல விரும்புவதாக திவாகரன் கூறினார். கருத்துவேற்றுமையை தவிர்க்க முதலமைச்சர் பதவி ஏற்க சம்மதித்தேன்.

முதல்வரான 3 நாட்களுக்கு முன் சசிகலாவை பொதுச்செயலாளராக ஆக்க கூறினார்கள். சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானபின் என்னுடைய கடமையை சிறப்பாக செய்தேன்.

வர்தா சீரமைப்பு பணிகளை சிறப்பாக செய்தேன். ஜெயலலிதாவின் நற்பெயருக்காகவே நற்பணிகளைச் செய்தேன். நான் சிறப்பாக பணியாற்றியது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

குடிநீருக்காக கிருஷ்ணா நதி நீரை வரவழைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். அவ்வாறு சந்தித்து முடிவுகண்டதால் நல்ல பெயர் கிடைத்தது.
மெரினா எழுச்சியின்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்காக அவசரச்சட்டம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டேன். அதன்பின் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார். என்னுடைய அமைச்சரவையில் உள்ளவரே அவ்வாறு பேட்டியளித்தது நீதியா அல்லது நியாயமா என்று தெரிவித்தார்.

பொதுச்செயலாளர் சசிகலாவிடம் தெரிவித்தேன். அவர் கண்டித்துவிட்டேன் இனிமேல் அப்படி பேச மாட்டார் என்று தெரிவித்தார். உதயகுமார் பேச்சை கண்டித்த அமைச்சர் செல்லூர் ராஜூவும் அதே கருத்தை வலியுறுத்தி மதுரையில் பேட்டியளிக்கிறார்.

என்னை முதல்வராக வைத்துக்கொண்டு ஏன் அவமானப்படுத்த வேண்டும்? என்னுடைய மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்து. கட்சியின் நிலையை கண்டு அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியில் உள்ளனர். என்னால் கட்சிக்கு பங்கம் ஏற்படக்கூடாது என்பதால் இதை யாரிடமும் சொல்லவில்லை.

இந்த சூழலில்தான் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எம்எல்ஏக்கள் கூட்டம் பற்றி எனக்கு தகவல் இல்லை. எதற்காக கூட்டப்பட்டது என்றுகூட எனக்கு தெரியாது. என்னை கட்டாயப்படுத்தியதால்தான் நான் ராஜினாமா செய்தேன்.

எனவே, அதிமுகவை கட்டிக்காக்க நல்ல தொண்டன் அல்லது நல்வழிப்டுத்துபவர் யாராவது ஒருவர் தலைமை தாங்கினால் நான் ஏற்பேன். தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன்.

மக்கள் விரும்பினால் ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவேன் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Breaking news ops

#BreakingNews என்னை கட்டாயப்படுத்தியதினால் தான் ராஜினாமா கடிதம் அளித்தேன் - முதலமைச்சர்

* தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றும் ஒருவர் தலைவராக வரவேண்டும் - முதலமைச்சர்

* தமிழகத்தை காக்க தன்னந்தனியாக இருந்து போராடுவேன் - முதலமைச்சர்
எனது மனசாட்சி உந்தப்பட்டதால் நான் இங்கு வந்தேன் -

* அதிமுக தொண்டர்களுக்கு சில உண்மைகள் சொல்ல அம்மாவின் ஆன்மா வலியுறுத்தியதால் நான் இங்கு வந்தேன்" - பன்னீர்செல்வம்

* ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு என்னை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு வலியுறுத்திய போது நான் மறுத்தேன் - முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என வலியுறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன் - பன்னீர்செல்வம்
மக்களின் நலத்திட்டங்கள் சிலருக்கு எரிச்சலூட்டியது - முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* ஜல்லிக்கட்டு தொடர்பாக நான் ஒரு புறம் பிரதமரை பார்க்க சென்ற போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதே கோரிக்கை வைத்தார் - முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், சசிகலா அவர்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என பேட்டி கொடுத்தார் - பன்னீர்செல்வம்

* என்னுடைய அமைச்சரவையில் இருக்கிறவர் மற்றொருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அது சரிதானா என்று சசிகலாவிடம் கேட்டேன் - பன்னீர்செல்வம்

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! பன்னீர் செல்வம் ராஜினாமா வாபஸ்!

சசிகலா எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ளார் ஓ. பன்னீர் செல்வம். திரைமறைவில் இத்தனை நாட்களாக நடைபெற்ற அனைத்து விசயங்களை ஊடகங்கள் முன்பு போட்டுடைத்தார். தன்னை கட்டாயப்படுத்தி முதலமைச்சர் பதவியில் இருந்த ராஜினாமா செய்ய வைத்ததை அம்பலப்படுத்தினார். மக்களும் தொண்டர்களும் விரும்பினால் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதை வாபஸ் வாங்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.
*_முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு._*

🎙உண்மை நிலைமையை கூறப்போகிறேன் -  பன்னீர்செல்வம்.

🎙ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு என்னை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு வலியுறுத்திய போது நான் மறுத்தேன்.கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என வலியுறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன்.

🎙ஜெயலலிதாவின் நிலையை கண்டு மருத்துவமனையில் அழுது புலம்பினேன்.

🎙வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது சசிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

🎙செல்லூர் ராஜு, உதயகுமார் மீதும் குற்றச்சாட்டு.

🎙முதல்வராக என்னையை அமரவைத்து கொண்டு அவமானப்படுத்தினார்கள்.

🎙சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பற்றி எனக்கு தகவல் இல்லை.உதயகுமார் பேட்டியை பார்த்து செல்லூர் ராசு என்னிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு மதுரை போய் அவரும் பேட்டி கொடுக்கிறார்.

🎙ராஜினாமா செய்ய ஆளாக்கபட்டேன்.கட்டாயப்படுத்தி கையெழுத்து.

🎙தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன்.

🎙மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்குவேன்

🎙ஒட்டுமொத்தத்தையும் போட்டு உடைத்தார் -  *ஓ.பி.எஸ்*.

ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மௌன அஞ்சலிTamilnadu CM O.PanneerSelvam pray in front of Jayalalitha memorial.)

சென்னை: தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நீண்ட தியானத்தில் ஈடுபட்டார்.

தமிழக அரசியலில் தொடர்ச்சியாக பரபரப்பான சூழல்கள் நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, விரைவில் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் ஆளுநர் அறிவுரைப்படி, புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அப்பதவியில் நீடித்து வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நினைவிடம் முன்பு அமர்ந்து, தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தி வந்தார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால், இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்துவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Tamilnadu CM O.PanneerSelvam pray in front of Jayalalitha memorial.

Monday, 6 February 2017

சசிகலா முதல்வராக எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

சசிகலா முதல்வராக பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற, சில வாரங்களிலேயே, தமிழக முதல்வராகவும் பதவியேற்கிறார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதுதொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பாக, அதன் நிர்வாகி செந்தில் குமார் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், விரைவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணையின்போது, ஜெயலலிதா உள்ளிட்டோரை குற்றவாளிகளாக அறிவித்து, சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனால், ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார்.

ஆனால், தற்போதைய அரசியல் சூழல் வேறாக உள்ளது. நல்ல முறையில் பன்னீர்செல்வம், முதல்வராகப் பணியாற்றி வருகிறார். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக, ராஜினாமா செய்ய வைத்து, சசிகலா புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார். விரைவிலேயே, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்டோர் சிறைக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் புதிய முதல்வரை நியமிப்பதில் சிக்கல் ஏற்படும். வீண் கால விரயம் ஏற்படுத்தும் இத்தகைய பணிகளை, உச்சநீதிமன்றம் தலையிட்டு, நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் சட்டப்பஞ்சாயத்து நிர்வாகி செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை இந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.