சிரித்த முகத்தோடு பதவியை ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் முதலமைச்சர் ஒ.பி.எஸ்
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, 3வது முறையாக முதலமைச்சாரக பதவியேற்கும் வாய்ப்பு, பணிவின் சிகரம் ஓ.பி.எஸ்.சையே தேடி வந்தது.
ஆட்சிக்கு ஒ.பன்னீர்செல்வம், கட்சிக்கு சசிகலா என்ற டீலில் கட்சியும், ஆட்சியும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா இறந்து 60 நாட்கள் ஆன நிலையில் முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார் ஓ.பி.எஸ்.
காலை 10 மணிக் கு போயஸ் கார்டனில் தொடங்கிய முக்கிய நிர்வாகிகளின் கூட்டம் நீண்ட விவாதத்துக்கு பிறகு, முடிவடைந்தது. பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை ஒ.பன்னீர்செல்வமே வாசித்தார்.
வழக்கமான பன்னீர்செல்வமாக இல்லாமல் இருண்டுபோன முகத்துடன் அவர் காணப்பட்டார். அந்த கடிதத்தை படிக்கும்போது மட்டும், சிரிப்பை வரவழைத்து கொண்டு, சிரித்தபடியே படித்தார்.
என்னதான் விஸ்வாசத்தோடு பதவியை ராஜினாமா செய்தாலும், தனிப்பட்ட முறையில்ல ஒரு இறுக்கம் இருக்கத்தானே செய்யும். அதை வெளி காட்டிக்கொள்ளாமல், தனது பதவியை மற்றவருக்காக ராஜினாமா செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதுவும் சிரித்தமுகத்தோடு, பதவியை தாரை வார்த்து கொடுத்த முதலமைச்சர் இந்தியவிலேயே இவராகதான் இருக்க முடியும்.
No comments :
Post a Comment