சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் போஸ்டரைக் கிழித்தவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் காவல்துறையினர் சிலரும் அடிக்கும் வீடியோ காட்சி வைரலாகப் பரவி வருகிறது.
அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அதிமுக அதிருப்தியாளர்களும் தீபா ஆதரவாளர்களும் சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இச்சூழலில் சென்னையில் சசிகலாவின் படத்துடன் கூடிய போஸ்டரை ஒருவர் கிழத்துள்ளார்.
இதைப் பார்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்த நபரைப் பிடித்து அடித்தார். உடன் இருத்த காவலர்கள் சிலரும் அவரைத் தாக்கத் தொடங்கினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
No comments :
Post a Comment